Type Here to Get Search Results !

பவானிசாகர் அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு அறிவிப்பு...


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக, பாசன நிலங்களுக்கு 09.01.2026 காலை 8.00 மணி முதல் 30.04.2026 காலை 8.00 மணி வரை 67 நாட்கள் தண்ணீர் திறப்பு மற்றும் 44 நாட்கள் தண்ணீர் நிறுத்தம் என்ற முறையில், 12000.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என மொத்தம் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என நீர்வளத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.