Type Here to Get Search Results !

அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கிய அமைச்சர்.....

 


மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலும் 213 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம். மொடக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் இன்று (12.02.2026) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் 213 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்தாவது


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்ற பிறகு மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டினை முன் மாதிரி மாநிலமாக உயர்த்தி உள்ளார்கள். அந்த வகையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கீழ் 10 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் அவர்களின் கல்விக்கு பயன்படும் வகையில் இருக்கும். பள்ளியில் மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்த்து அவர்கள் தொடர்ந்து, சோர்வின்றி கல்வி பயில முதலமைச்சரின் காலை உணவு திட்டம், உயர்கல்வி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டங்களை எதிர்காலம் சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். திட்டத்தினை துவக்கி வைத்தார். இம்மடிக்கணினியானது


மேலும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, அரசு சிக்கய்ய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம், போட்டித்தேர்வுகளுக்கு பயில பயிற்சி மையம் ஆகியவையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு

ஆசிரியர்கள் பெருமைப்படும் அளவில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


அதன்படி இன்றைய தினம் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பயிலும் 142 மாணவர்கள் மற்றும் 71 மாணவியர்கள் என மொத்தம் 213 கல்லுாரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முனைவர். ராஜேந்திரன், வணிகவியல் துறை தலைவர் முனைவர்.கல்யாணி, ஒருங்கிணைப்பாளர்கள் விசாலாட்சி, தமிழ்ச்செல்வன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.