Type Here to Get Search Results !

ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டரங்கம் மைதானத்தில் தேர்தலுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

                        ”தேர்தல் திருவிழா    -   தமிழ்நாட்டின் பெருவிழா


ஈரோடு மாவட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ முன்னிட்டு ”வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 





ஈரோடு மாவட்டம், வ.உ.சி.பூங்கா விளையாட்டரங்கம் மைதானத்தில்   நேற்று  (28.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு ”வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்

அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என (15.03.2026) அன்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம், விளையாட்டுத்துறை. ஊரக வளர்ச்சி துறை, கைத்தறி துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும், எந்த விதமான தூண்டுதலும் இல்லாத தேர்தலை நாம் நடத்துவதற்கும் நாம் அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி தேர்தல் நாளன்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.




இன்றைய தினம், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நந்தா நேச்சுரோபதி, ஆயுர்வேதா, சித்தா கல்லூரியை சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பார்வையிட்டார். மேலும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், வ.உ.சி.பூங்காவில்,100% வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் வாக்காளர்களிடம் துண்டு  பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.






இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரியா, உதவி இயக்குனர் கைத்தறி துறை சரவணன், மாவட்ட ஊராட்சி செயலர் தனம், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணசாமி, கல்பனா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.