மாவட்ட முன்னோடி வங்கியான Canara Bank தயாரித்துள்ள 2026-27 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையில், மொத்தம் ரூ.36,205.08 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாயத் துறைக்கு ரூ.21,342.09 கோடி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.14,211.75 கோடி, பிற முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ.651.24 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025-26 ஆம் ஆண்டின் இலக்கைவிட ரூ.5,947.09 கோடி (19.65%) அதிகமாகும். NABARD சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.கடந்த 2025-26 நிதியாண்டில் மொத்த முன்னுரிமை கடன் இலக்காக ரூ.30,257.99 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.32,315.34 கோடி கடன்கள் வழங்கப்பட்டன. இதில், விவசாயத் துறைக்கு ரூ.19,933.62 கோடியும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.11,838.20 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் NABARD, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)