Type Here to Get Search Results !

Spinal Injured Persons Association (SIPA) அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு...


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  Spinal Injured Persons Association (SIPA) அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.


அந்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் சுமார் 150 முதுகுத்தண்டு காயமடைந்த மாற்றுத்திறனாளிகள் வசித்து வருவதாகவும், அவர்களில் பலர் பொருளாதார சிரமம் மற்றும் பழுதடைந்த Wheelchair காரணமாக அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, முதற்கட்டமாக 9 பேருக்கு இலவச Wheelchair மற்றும் 3 பேருக்கு தனிப்பயன் Customized Wheelchair வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைப்பு சார்பில் கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும், இதுபோன்று மிகுந்த சிரமத்தில் வாழும் 9 தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும், 3 நபர்களுக்கு காலி வீட்டு மனையில் வீடு கட்டி கொடுத்தும் மற்றும் 1 நபருக்கு அடுக்கு மாடி குடியுருப்பில் இலவச வீடு ஒதுக்கி வழங்க ஆவண செய்து அனைவரின் வாழ்வாதாரத்தை காக்க  தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது .




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.