Type Here to Get Search Results !

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

 


சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, 03.08.2026 (திங்கட்கிழமை) அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  கந்தசாமி,  தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு ஈடாக, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணி நாளாக செயல்படும்.

மேலும், இந்த விடுமுறை Negotiable Instruments Act, 1881-ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இது பொருந்தாது. அதேநாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.