Type Here to Get Search Results !

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழு - முதலமைச்சர் உத்தரவு.


தமிழ்நாட்டில் எல் நினோ (El Nino) காரணமாக ஏற்படக்கூடிய காலநிலை மாற்றம், நீர்வள மேலாண்மை, வேளாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பான சவால்களை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும் உயர்மட்ட நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

பசிபிக் பெருங்கடலில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் உருவாகும் எல் நினோ நிகழ்வு பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது அது தீவிர (Strong/Super) எல் நினோ எனக் கருதப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் தீவிர எல் நினோ நிகழ வாய்ப்பு இருப்பதாக அறிவியல் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையை முன்னிட்டு, தமிழ்நாடு State Disaster Risk Reduction Agency (TNDRRA) தலைமையில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, நீர்வள மேலாண்மை, கடலோர மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறும் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் Climate Change and Climate Disaster Management, IIT, WRI, Tamil Nadu Green Climate Company (TNGCC), TN Maritime Board, SDMRI மற்றும் TNUIFSL உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் இடம்பெறுகின்றனர்.

இந்த நிபுணர் குழு, எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே ஆய்வு செய்து, அரசின் துறைகளுக்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதுடன், பேரிடர் பாதிப்பு குறைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.