Type Here to Get Search Results !

ஈரோட்டில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்...


பாரதீய மஸ்தூர் சங்கம்  சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். 

பாரதிய கட்டுமான தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் சௌந்தர்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஈரோடு மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். 

தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திருத்தம் செய்ய வேண்டும்,  .அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,  ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், விலை வாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்  என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், மாவட்ட பொருளாளர் சரவணகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கட்டுமான தொழிலாளர் சங்கத்திலிருந்து கதிர்வேல், போக்குவரத்து துறை சங்கத்திலிருந்து முருகேசன், மருந்து பிரதிநிதிகள் சங்கத்திலிருந்து பிரபு,  டாஸ்மாக் சங்கத்திலிருந்து முருகேசன் ஆகியோர் மற்றும் பிரகாஷ் உட்பட பலர்  கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.