பெருமுகை ஊராட்சி, சைபன்புதூர் பகுதியில் VPG ராம்ஜி திட்டத்தின் கீழ் ரூ.17.35 லட்சம் மதிப்பீட்டில் 14,250 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளின் வகைகள், எண்ணிக்கை, உற்பத்தி முறை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு, மூலப்பொருட்கள், தினசரி உற்பத்தி அளவு, தயாரிப்பு முறை, உரத்தின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
தொட்டகோம்பை பகுதியில் ரூ.4.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியையும், தொட்டகோம்பை மற்றும் பெருமுகை பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்புக் கிடங்கின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் செயல்படும் நியாயவிலைக் கடையில் பயோமெட்ரிக் கருவியின் செயல்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கிய விவரங்கள், பொதுவிநியோகப் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், கடையின் செயல்பாட்டு நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் வட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை பார்வையிட்டு, கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் குமரேசன், தூக்கநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், கதிரேசன், துணை வட்டாட்சியர் செந்தில்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் பெருமாள், உதவி பொறியாளர் கருணாகரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(4)%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)

%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

%20(1).jpeg)
%20(1).jpeg)