Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 390 மனுக்கள் பெறப்பட்டன...

 


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.08.2026  இன்று  நடைபெற்றது.



கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தார்சாலை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இலவச வீட்டுமனைப் பட்டா, தனிப்பட்டா மாற்றுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, தெருவிளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டன.


பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு, அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.


மேலும், திண்டல் பகுதியைச் சேர்ந்த திரு.குப்புசாமி அளித்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,500 மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.


பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த திரு.சிக்கந்தர் அவர்களுக்கு தொழில் மேற்கொள்வதற்காக ரூ.16,666 மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான ஆணையும் வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துறை ஆட்சியர் (ச.பா.தி)ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜாகீர் உசேன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, சமூக நீதித்துறை அலுவலர் சுடலைமணி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.