Type Here to Get Search Results !

ஈரோட்டில் 12-வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாட்டம்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறித்துறையின் சார்பில் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று தொடங்கி வைத்து, நெசவாளர்களுக்கு ரூ.28.95 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.




ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி தொழிலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுடன், கைத்தறி நெசவாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் நோக்கிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும், 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.




ஈரோடு மாவட்டத்தில் 191 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 57 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என மொத்தம் 248 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 55,000 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னிமலை, தாண்டாம்பாளையம், சிவகிரி, கவுந்தப்பாடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், டி.ஜி.புதூர் மற்றும் தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சென்னிமலை Bedsheet, பவானி Jamakkalam உள்ளிட்ட பல்வேறு கைத்தறி பொருட்கள் சிறப்புப் பெற்றவை.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. இதில் Bedsheet, படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலை, மேட், துண்டு, Jamakkalam, காட்டன் மற்றும் மென்பட்டு ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட 20 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கைத்தறி பொருட்களை வாங்கி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.





விழாவில், நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள மூத்த நெசவாளர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, e-Mudra கடன் தொகை ஆணை, சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத் தொகை ஆணை, முதியோர் ஓய்வூதியத் திட்டத் தொகை ஆணைகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் மொத்தம் ரூ.28.95 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.