“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ், 2-வது நாளாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள், பெருந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை 20.08.2026 இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தின் கீழ் நேற்று (19.08.2026) பெருந்துறை, கிளைச்சிறை, துடுப்பதி மற்றும் பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, சிறப்புப்பள்ளி, பேருந்து நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, மருந்து கிடங்கு, வலமிகு பூங்கா, அமைதி பூங்கா, சமூக நீதி மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, 2-வது நாளான இன்று சீலம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
துடுப்பதி ஊராட்சி சாணர்பாளையத்தில் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்கும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்கள் காலை உணவினை அருந்துவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) உமாசங்கர், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கவிதா, பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
%20(1)%20(1).jpg)

%20(1).jpeg)

.jpeg)
%20(1).jpeg)