ஈரோடு தாளவாடி, தலமலை, தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
அதை தொடர்ந்து 20-வது மாதமாக ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த அன்னதான நிகழ்வில், ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. இதில், மிளகு சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், காய்கறி சாதம் என நான்கு வகையான சாதங்கள் வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக அம்மன் கேலண்டரிங் மில் சுப்பிரமணியம், பூபதி ஆயில் மில் உரிமையாளர் S. A. ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் நேதாஜி காய்கறி மார்க்கெட் கடை உரிமையாளர்கள், விவசாயிகள், கோவில் அறங்காவலர்கள், அன்னதான கமிட்டி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டு 2,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதான உணவை வழங்கினர்.
தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பில் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் சுமார் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், தலமலை ஆஞ்சநேயர் திருக்கோவிலிலும் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.