Type Here to Get Search Results !

ஈரோட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 பணிகளை ஆட்சித்தலைவர் கள ஆய்வு....


ஈரோடு மாவட்டம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மற்றும் நாராயணன் லேஅவுட் பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 முதற்கட்ட வீட்டு பட்டியலிடல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச. கந்தசாமி அவர்கள் இன்று (01.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெறும் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகளின் போது, வீடுகள் பட்டியலிடல், குடும்ப விவரங்கள் பதிவு, அரசால் வழங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் (மொபைல் செயலி) மூலம் தகவல் பதிவேற்றம், கணக்கெடுப்பு நடைமுறைகள், தகவல்களின் துல்லியம் மற்றும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

மேலும், கணக்கெடுப்புப் பணியாளர்கள் பொதுமக்களை கனிவுடன் அணுகி, அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு குடும்பத்தின் விவரங்களையும் முழுமையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்ய வேண்டும் என்றும், கணக்கெடுப்பில் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் சட்டப்படி முழுமையான இரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, அவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் 4,464 கணக்கெடுப்பாளர்கள், 779 மேற்பார்வையாளர்கள், 5,043 HLB அலுவலர்கள், 60 Charge அலுவலர்கள் மற்றும் மொத்தம் 5,243 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சுமார் 7,87,469 வீடுகள் கணக்கெடுப்பின் கீழ் பட்டியலிடப்பட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.