தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு (eKYC) மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளும், 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலம் eKYC பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் eKYC பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், 02.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
எனவே, இதுவரை கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் eKYC பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு eKYC பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
