ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027-ன் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி 28.08.2026 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 பணிகளின் ஒரு பகுதியாக வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் வீடுகள் தொகுப்பு பணிகள் கடந்த 01.08.2026 முதல் தொடங்கி, 30.08.2026 வரை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம், வலையக்கார வீதி, கள்ளுக்கடை மேடு, பட்டக்கார வீதி மற்றும் நடராஜா திரையரங்கம் Housing Unit குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
கணக்கெடுப்பாளர்கள் வீடு தோறும் சென்று மேற்கொள்ளும் வீட்டு பட்டியலிடல் பணிகள், குடும்ப விவரங்கள் பதிவு செய்யப்படும் முறை மற்றும் அரசால் வழங்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களான Mobile App மூலம் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும் விதம் குறித்து அவர் பார்வையிட்டார்.
மேலும், கணக்கெடுப்பு நடைமுறைகள், தரவுகளின் துல்லியம் மற்றும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
%20(5)%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)