ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் மறுவாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி ஆகியோர் 29.08.2026 இன்று திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் உலக வங்கி நிதியுதவியுடன், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான பல்வேறு மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் சிறப்புக் கல்வி, பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி, பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல், Physiotherapy, உளவியல் ஆலோசனை மற்றும் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான சேவைகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெறுவதுடன், பல்வேறு அலுவலகங்கள் மற்றும் மையங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய சிரமமும் குறையும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர மிதிவண்டி, காதொலிக் கருவி மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வின் போது, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டி.சண்முகன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.தமிழ்ச்செல்வி, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சங்கர் கணேஷ், சத்தியமங்கலம் வருவாய் வட்டாசியர் கார்த்திக்கேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மோகன், தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளர் தமிழ்செல்வன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
.jpeg)
%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpg)