Type Here to Get Search Results !

அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்திருவிழாவையொட்டி 60 சிறப்புப் பேருந்துகள்இயக்கம்.....


ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா  ஆகஸ்ட் 12 - ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை) லிட்., ஈரோடு மண்டலம் சார்பில்   ஆகஸ்ட் 12 - ஆம் தேதி முதல் 16 - ஆம் தேதி வரை கோபி, சத்தி, நம்பியூர், கவுந்தப்பாடி, பவானி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுப்புறங்களிலிருந்து  60 சிறப்புப் பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படவுள்ளன. எனவும்,மேற்கண்ட சிறப்பு பேருந்துகள் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஈரோடு மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பொதுமேலாளர்  தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.