ஈரோடு, ஆனக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் 15.08.2026 இன்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 148 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.57,02,560 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தொழிலாளர் துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பிலான நலத்திட்ட உதவிகள் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 678 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டி.சண்முகன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
%20(4)%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)