Type Here to Get Search Results !

தீரன் சின்னமலை நினைவு ஆடிப்பெருக்குவிழாவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்......


ஈரோடு மாவட்டம், அரச்சலூர் ஒன்றியத்தில் நடைபெற்ற வீரமாவீரன் தீரன் சின்னமலை நினைவு ஆடிப்பெருக்குவிழா–2026 நிகழ்ச்சியில், மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு ஆடிப்பெருக்குவிழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.









தொடர்ந்து நடைபெற்ற விழாவில், மாண்புமிகுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் , மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர்  ம.விஜய்  பாலாஜி, மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி, மாண்புமிகு கால்நடைத் துறை அமைச்சர் செ.கமலி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.







மேலும், மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் வாரிசுதாரர்களுக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்            கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை  அமைச்சர்  ம.விஜய்  பாலாஜி ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.