தென்னிந்தியாவின் முன்னணி பாரம்பரிய ஆண்கள் ஆடை பிராண்டான Minister White, இந்தியாவின் 68வது மற்றும் ஈரோட்டின் 2வது ஷோரூம் ஈரோடு நேதாஜி சாலையில் கிளாக் டவர் அருகே திறக்கப்பட்டுள்ளது.
புதிய ஷோரூமை Otto Clothing Private Limited (OCPL) நிறுவனத்தின் Otto Essentials பிரிவின் CBO திரு. பிரவீன் மாரிமுத்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (FATIA) தலைவர் வி.கே. ராஜமாணிக்கம் மற்றும் முனிருல் இஸ்லாம் மசூதி அறக்கட்டளை செயலாளர் சி.ஏ. ஷௌகத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
புதிய ஷோரூமில் பிரீமியம் வேஷ்டிகள், Flexi Waist வேஷ்டிகள், திருமண சில்க் கலெக்ஷன்கள், லினன் மற்றும் காட்டன் சட்டைகள், குர்தாக்கள், ஷர்ட்டிங் மற்றும் சூட்டிங் துணிகள், இன்னர்வேர் உள்ளிட்ட பல்வேறு தரமான ஆண்கள் ஆடைகள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய ஷோரூம் திறப்பின் மூலம், தென்னிந்திய வாடிக்கையாளர்களுக்கு தரமான பாரம்பரிய ஆடைகளை எளிதாகக் கொண்டு சேர்க்கும் தனது வளர்ச்சி பயணத்தை Minister White மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
.jpeg)
.jpeg)