Type Here to Get Search Results !

IRCSயின் ஈரோடு கிளைக்கு தானமாக வழங்கப்பட்ட கட்டிடம் - கலெக்டர் ஆய்வு ...

 


ஈரோடு மாவட்டம், பார்க் ரோடு பகுதியில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஈரோடு கிளைக்கு தானமாக வழங்கப்பட்ட கட்டிடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தளங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி 05.08.2026 இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து வீராசாமி பிள்ளை, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட A.P. தங்கவேல் செட்டியார் சாலையில் கதவு எண் 95-ல் அமைந்துள்ள சுமார் 3,288 சதுரடி பரப்பளவு கொண்ட,  கட்டிடத்தை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஈரோடு கிளைக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்கான ஆணை எண் 3527/2025, நாள்: 10.06.2025-ன் படி அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த கட்டிடம், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மனிதாபிமான சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கட்டிடத்தின் தற்போதைய நிலை, பயன்பாட்டு வாய்ப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.