ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் 21.08.2026 இன்று நடைபெற்றது.
கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான இப்பயிற்சி, 225 கிராமங்களிலும் Video Conference வழியாக ஒருங்கிணைந்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையேற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி வழங்கினார்.
கிராம அளவிலான குழந்தை பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதன் மூலம், கிராமங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகளுக்கான அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கிராமங்களிலும் இக்கூட்டங்களை நடத்துவதன் மூலம் குழந்தை நேய கிராமங்களை உருவாக்குவதற்கும், ஈரோடு மாவட்டத்தை குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாவட்டமாக உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், குழந்தை உதவி மையம் – 1098 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இப்பயிற்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழுமம் உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
%20(1)%20(1).jpg)