நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் என்பது கடன் அல்ல; எதிர்கால முதலீடு என்பதால் எந்தத் தயக்கமும் இன்றி வங்கிகள் கல்விக்கடன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கல்விக்கடன் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல் மற்றும் கல்விக்கடன் முகாம்கள் நடத்துவதன் மூலம் புதிதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும், ஏற்கனவே கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, Indian Overseas Bank, Union Bank, Bank of India, Canara Bank, State Bank of India ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக்கடனுக்கு விண்ணப்பித்திருந்த 110 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.84 கோடி மதிப்பிலான கல்விக்கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும், மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் கல்விக்கடன் குறித்த கருத்துக்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கல்விக்கடன் தொடர்பான பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்த், Canara Bank முதுநிலை மேலாளர் சாயீ கண்ணன், வங்கி கிளை மேலாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)