Type Here to Get Search Results !

இந்திய குடியரசு துணைத்தலைவர் ஈரோடு வருகை - முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை...


மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர் C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள், வருகிற 29.08.2026 அன்று ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரி நிறுவனர் தினவிழாவில் பங்கேற்க வருகை தரவுள்ளார்.




இதனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  25.08.2026 இன்றுநடைபெற்றது.





மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துணைத்தலைவரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.