Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர்  சு. சாந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.08.2026 இன்று  நடைபெற்றது.


இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தார்ச்சாலை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இலவச வீட்டுமனை பட்டா, தனிப்பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, தெருவிளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 380 மனுக்கள் பெறப்பட்டன.



பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், ஆர்.என். புதூரில் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் தனித்துறை ஆட்சியர் (ச.பா.தி) ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர்  மகேஸ்வரி, சமூக நீதித்துறை அலுவலர் சுடலைமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  சங்கர் கணேஷ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.