பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013-ன் படி, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவின் தலைவராக பெண் அலுவலர் நியமிக்கப்படுவதுடன், உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும். மேலும், ஒரு உறுப்பினர் இச்சட்டம் குறித்து நன்கு அறிந்தவராகவோ அல்லது சமூகத்தில் அறியப்பட்ட Social Activist ஆகவோ இருக்க வேண்டும்.
இதுவரை உள்ளக குழு அமைக்காத நிறுவனங்கள் உடனடியாக குழுவை அமைத்து அதன் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளக குழு அமைக்காத நிறுவனங்களுக்கு, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 2013-ன் கீழ் ரூ.50,000 வரை அபராதம் விதிக்க வழிவகை உள்ளது. தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் வழிவகை உள்ளதாக ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் புகார் தெரிவிக்கும் வகையில் பாதுகாப்புப் பெட்டி, Safety Box அமைக்கப்பட வேண்டும். உள்ளக குழு அமைக்கப்பட்ட விவரங்களை SHE BOX PORTAL (https://shebox.wcd.gov.in/registerOffices) மற்றும் TNPOSH https://poshicc.tnsw.in/icc_webapp/Registerpage இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், Safety Box அமைக்கப்பட்ட விவரங்களையும், உள்ளக குழு தொடர்பான ஆண்டு அறிக்கையையும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
%20(5)%20(1).jpg)