Type Here to Get Search Results !

இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ‘விக்சித் பாரத் வினாடி வினா’


ஈரோடு மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மத்திய அரசின் MY Bharat சார்பில் ‘விக்சித் பாரத் யங் லீடர்ஸ் டயலாக் (VBYLD) 2027’ என்ற தேசிய அளவிலான இளைஞர் ஈடுபாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், அவர்களின் புதிய சிந்தனைகள், கருத்துகள் மற்றும் திறமைகளை தேசிய அளவில் பயன்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் முதல்கட்டமாக ‘விக்சித் பாரத் வினாடி வினா’ ஆன்லைன் முறையில் 17.08.2026 முதல் 30.09.2026 வரை MY Bharat இணையதளம் மூலம் நடைபெறுகிறது. 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதில் பங்கேற்க தகுதியுடையவர்கள். வினாடி வினாவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மாணவ, மாணவியர்களுக்கு தேசிய அளவிலான அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், இதில் ஒரு பகுதியாக ஓவியம், நாட்டுப்புற நடனப்புரப்பாடல், பேச்சுப்போட்டி மற்றும் கவிதை எழுதுதல் உள்ளிட்ட கலைச்சார்புப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

ஈரோடு மாவட்ட இளைஞர்கள் இந்த தேசிய அளவிலான வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது அறிவு, திறமை மற்றும் படைப்பாற்றல் வாய்ப்பை வெளிப்படுத்தி, ‘விக்சித் பாரத்’ உருவாக்கும் புதிய சிந்தனைகளை பங்களிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.