தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், பவானி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் உத்தரவின்படி, இத்திட்டத்தின் கீழ் மாதம் ஒருமுறை ஒரு வட்டாரம் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை முதன்மை அலுவலர்களும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்வதுடன், வளர்ச்சித்திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஜம்பை பேரூராட்சி, தளவாய்பேட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பரிசோதனை செய்யும் முறை மற்றும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாட்டுத்தீவனங்களின் இருப்பு குறித்து பார்வையிட்டார். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இச்சங்கத்தில் மொத்தம் 312 உறுப்பினர்களும், தற்போது பால் வழங்கும் உறுப்பினர்கள் 121 பேரும் உள்ளனர்.தளவாய்பேட்டை, கருக்குப்பாளையம், புன்னம், பெருமாள்பாளையம்புதூர், நல்லிபாளையம், ஜம்பை, ஒரிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டும் தளவாய்பேட்டை தொகுப்புப் பால் குளிரூட்டும் மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பவானி நகராட்சி தலைமை நீரேற்று நிலையம் மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவை ஆய்வு செய்தார். காமராஜர் நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லம் தோறும் சென்று பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதுடன், தூய்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பவானி நகராட்சி மகாத்மா காந்தி சாலை பகுதியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நகராட்சி நடுநிலைப்பள்ளி, வர்ணபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் விவரங்கள், உணவுப்பட்டியல், உணவின் சுவை மற்றும் தரம், பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடி உணவு அருந்தினார்.
பவானி நகராட்சி பேருந்து நிலையம் அருகிலுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் முறைகள், தினந்தோறும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, பவானி நகர்மன்றத் தலைவர் இ. சிந்தூரி இளங்கோவன், பவானி நகராட்சி ஆணையாளர் கு. ஆர்த்தி, மாவட்ட துணைப் பதிவாளர் (ஆவின்) கி. சம்பத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)