ஈரோடு மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் 2025-26ஆம் நிதியாண்டு வரையிலான செலவினங்கள் மீதான சமூகத் தணிக்கை செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 30 வரை 5 சுற்றுகளாக நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு சுற்றின் சமூகத் தணிக்கை நிறைவடையும் நாளிலும், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் இக்கூட்டங்கள் நடைபெறும்.
கிராம சபை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் அந்தந்த கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். மேலும், கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்க வட்டார அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)




