Type Here to Get Search Results !

பெரியார் அண்ணா நினைவகத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை.....



தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாளையொட்டி, ஈரோடு மாநகராட்சி பெரியார் வீதியில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில், மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆகியோர் இன்று தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


தந்தை பெரியார் அவர்கள் தமிழ் மண்ணில் பெரும் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தகையாளராகவும், தீண்டாமை ஒழிப்பு, பெண் சுதந்திரம் மற்றும் சமஉரிமை, சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரும் சமமாக கருதப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்திருத்தங்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தவராகவும் குறிப்பிடப்பட்டார்.

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த இல்லம், அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் கருத்துக்களை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தந்தை பெரியார் அண்ணா நினைவகமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17-ஆம் நாளை சமூகநீதி நாளாக அறிவித்து அரசு விழாவாகக் கொண்டாடி வருகிறது.

அதன்படி, 148-வது பிறந்தநாள் அரசு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் மோகன் (ஈரோடு மேற்கு), சண்முகன் (மொடக்குறிச்சி), மரு.சுதாகர் (காட்பாடி), முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலைமாமணி (செய்தி), திரு.சு.செந்தில்குமார் (விளம்பரம்), ஈரோடு வட்டாட்சியர் கவிதா, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.