Type Here to Get Search Results !

2026-2027 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்...


2026-2027 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும்.

இப்போட்டிகளில் 12 முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினர், அனைத்து வயதினைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்.

தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டென்னிஸ், கைப்பந்து, ஹேண்ட்பால், கேரம், சதுரங்கம், கோ-கோ, யோகாசனம் மற்றும் Speed Skating உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டு அரங்குகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடைபெறவுள்ளன.

அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 21 அன்று V.O.C. Stadium, Erode-ல் நடைபெறுகின்றன.

அனைத்து போட்டிகளும் காலை 7.00 மணிக்கு தொடங்கும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும் என்றும், Spot Entry பதிவு வசதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள் தங்களது பிரிவுக்கு தேவையான புகைப்படம், Aadhaar அட்டை, உரிய அடையாளச் சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை விளையாட்டு சீருடையுடன் போட்டி நடைபெறும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு http://tncmtrophy.sdat.in இணையதளத்தை அணுகலாம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 9788736392 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.