Type Here to Get Search Results !

உலக தேங்காய் தினத்தில் தென்னங்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஈரோடு மாவட்டஆட்சியர்.


உலக தேங்காய் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 02.09.2026 இன்று தென்னங்கன்று நட்டு வைத்தார். மேலும்,விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளையும் வழங்கினார்.


உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தேங்காய் சாகுபடியின் முக்கியத்துவம், தேங்காய் சார்ந்த தொழில்களின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

“கற்பக விருட்சம்” என அழைக்கப்படும் தென்னை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் மனித வாழ்வில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. தேங்காய் நீர், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், நார் மற்றும் ஓடு உள்ளிட்டவை உணவுப் பொருட்கள் தயாரிப்பு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள், கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


தமிழ்நாட்டில், குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேங்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உலக தேங்காய் தினத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர்  குரு சரஸ்வதி, விவசாயிகள் மற்றும் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.