தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சார இயக்கம் – 2026-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் HIV/AIDS குறித்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலி மற்றும் கலைநிகழ்ச்சிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், HIV/AIDS குறித்த சரியான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார். HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டாமல் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் HIV/AIDS குறித்த விழிப்புணர்வு தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, செஞ்சுருள் சங்க தன்னார்வலர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற HIV/AIDS விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். HIV/AIDS, பால்வினை நோய்கள் மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
முன்னதாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ வாகனங்களில் HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஒட்டினார். கடந்த 06.08.2026 அன்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட HIV/AIDS விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் இடம்பெற்ற ஓவியங்களையும் அவர் பார்வையிட்டு, சிறந்த ஓவியங்களைத் தேர்வு செய்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரி முதல்வர்கள், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் நம்பிக்கை மைய ஆலோசகர்களுக்கு HIV/AIDS மற்றும் பால்வினை நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.
“வாழ்க்கையை கொண்டாடுவோம்”, HIV/AIDS மற்றும் பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வு, Breakfree செயலியின் பயன்பாடு, பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள், பாதுகாப்பான ரத்தப் பயன்பாடு மற்றும் தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அருணா, முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி, குடும்ப நலன்துணை இயக்குநர் மரு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட அலுவலர் துரைசாமி செஞ்சுருள் சங்க தன்னார்வலர்கள், மாணவ.மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுலவர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpg)
%20(1).jpg)
.jpeg)
.jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpg)