ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கட்டுமானப் பணியிட விபத்தில் உயிரிழந்த 3 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.21 இலட்சம் நிவாரண நிதியுதவியினை மாவட்ட ஆட்சித்தலைவ ச.கந்தசாமி அவர்கள் இன்று (19.09.2026) வழங்கினார்.
தொழிலாளர் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் சார்பில், கட்டுமானப் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றை தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.8,00,000/- வீதம் ரூ.16,00,000/- கட்டுமானப் பணியிட விபத்து மரண நிவாரணமாகவும், 1 கட்டுமானத்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5,00,000/- கட்டுமானப் பணியிட விபத்து மரண நிவாரணம் என மொத்தம் 3 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.21 இலட்சம் நிவாரண நிதியுதவியினை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது. தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) செல்வி வெ.பிரியதர்ஷினி, கண்காணிப்பாளர் கு.பாலசுப்ரமணியம், தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(5)%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)