Type Here to Get Search Results !

கலெக்டர் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி வகுப்பு...


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிலை அலுவலர்களுக்கு “ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்” தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் இன்று (19.09.2026) நடைபெற்றது.


இப்பயிற்சி வகுப்பில், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள், தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், சிறு தண்டனைகள், பெருந்தண்டனைகள், நீதிமன்ற வழக்குகளை கையாளும் முறைகள், வழக்குகள் தொடர்பான சட்ட நடைமுறைகள், அலுவலர்களின் பொறுப்புகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.



இப்பயிற்சி வகுப்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளையும் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பினை மாவட்ட வருவாய் அலுவலர் (பணி ஓய்வு) திரு.எம்.ரத்தினசாமி அவர்கள் நடத்தி, அலுவலர்களுக்கு தேவையான விளக்கங்கள் மற்றும் நடைமுறை சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார்.

இப்பயிற்சியின் மூலம் அரசுத்துறை அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான நடைமுறைகளை தெளிவாக அறிந்து, தங்களது பணிகளில் சட்ட விதிமுறைகளின்படி திறம்பட செயல்படுவதற்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. தேன்மொழி உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.