ஈரோடு மத்திய பேருந்து நிலையம் எதிர்ப்புறம், நல்லி மருத்துவமனை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான ஆதார் சேவை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இன்று திறந்து வைத்தார்.
பொதுமக்கள் ஆதார் தொடர்பான சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் ஒரே இடத்தில் பெறும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI நேரடியாக இம்மையத்தை இயக்குகிறது.
இம்மையத்தின் மூலம் புதிய ஆதார் பதிவு, மக்கள்தொகை மற்றும் உயிர்வழி விவரங்களைப் புதுப்பித்தல், பிழை திருத்தம் மற்றும் குறைதீர் உள்ளிட்ட பல்வேறு ஆதார் சேவைகளை பொதுமக்கள் பெறலாம். 4 செயல்பாட்டு கிட்கள் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஏற்ற நேரத்தில் நேரில் வந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏழு நாட்களிலும் இம்மையம் செயல்படும். மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதில் சேவைகளைப் பெறும் வகையில் சக்கர நாற்காலி அணுகுமுறை, அணுகலுக்கு ஏற்ற கழிப்பறை மற்றும் தனிப்பட்ட குறைதீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆதார் சேவை மையத்தின் மேலாளர் நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு விரைவாகத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறப்பு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகள் குறித்து கேட்டறிந்தார். நிகழ்வில் ஆதார் நிர்வாக மேலாளர் கணேசன், ஆதார் சேவை மைய பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
%20(3)%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)