அரிமா சங்கங்களின் சாசன நாள் விழா மற்றும் புத்தாக்கப் பயிற்சி...
nammaerode24x7tamilnewsSeptember 23, 2026
0
ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் சாசன நாள் விழா மற்றும் புத்தாக்கப் பயிற்சி செப்டம்பர் 22 நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை தலைவர் அரிமா T.S.P. தாமோதரன் முறைப்படி துவக்கி வைத்தார். தொடர்ந்து அரிமா A. ராஜா அரிமா வழிபாட்டை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தலைவர் அரிமா A. ரேணுகாதேவி வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, சங்கத்தின் செயலர்களான அரிமா A. மோகன் மற்றும் அரிமா E. தனஞ்ஜெயன் ஆகியோர் செயலர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இவ்விழாவில், முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா Er. P. சந்திரசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாசன உறுப்பினர்களைப் பாராட்டிச் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பட்டயத் தலைவர் அரிமா கௌரி கணேசன் ஏற்புரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சி முகாமில், மாவட்டத் தலைவரும் மாவட்ட பயிற்றுநருமான அரிமா N. ஸ்ரீதர் அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்குப் பயனுள்ள பயிற்சிகளை வழங்கி உரையாற்றினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் அரிமா D. ஜெகநாதன், வட்டாரத் தலைவர் அரிமா M. ரமேஷ்குமார் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அரிமா K.P. செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவில், மூத்த அரிமா கணேசன், பட்டயத் தலைவர் அரிமா கௌரி கணேசன், ஈரோடு எக்ஸலண்ட் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா T.S.P. தாமோதரன், செயலாளர் அரிமா A. மோகன், பொருளாளர் அரிமா K.P. செல்வராஜ், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா A. ரேணுகா தேவி, செயலாளர் அரிமா E. தனஞ்ஜெயன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.