ஈரோடு மாவட்டம், மேட்டுக்கடை, சூர்யா பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான கால்பந்து போட்டியை மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் இன்று (12.09.2026) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கா.க.ஆனந்த் மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதைப் போல விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி சிறந்து விளங்க வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு, சர்வதேச மற்றும் இந்திய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி.திவ்யா நாகேஸ்வரி, விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)