ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், அடுக்குமாடி குடியிருப்பு, மாதாந்திர உதவித்தொகை, பேட்டரி வீல் சேர், வீடு கட்ட கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, தெருநாய்கள் தொல்லை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் உதவி, காவல்துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)