சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டிலான 13 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
April 03, 2022
1
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை
வளாகத்தில் இன்று (03.04.2022) மாவட்ட வருவாய் டாக்டர்.ப.முருகேசன்
அவர்கள் தலைமையில், செய்தித்துறை அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் அவர்கள், சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட
பகுதிகளுக்கான ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டிலான 13 புதிய வளர்ச்சித்
திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்கள்
பயன்பெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்புடன் செயல்படுத்தி
வருகிறார்கள். கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு துறைகளுக்கு
பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். அதன்படி, வருகின்ற 06.04.2022
அன்று நடைபெறவுள்ள மானிய கோரிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் பல்வேறு
திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இன்றைய தினம் உள்கட்டமைப்பு மற்றும் இடைவெளி நிரப்பும் நிதி
திட்டத்தின்கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் சென்னிமலை
பேரூராட்சிக்குட்பட்ட வாரச் சந்தை வளாகத்தில் உள்ள 3.00 இலட்சம் லிட்டர்
கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணி செய்து
சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும், அதேப்பகுதியில் ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில்
சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் 3.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு
கொண்ட மேல்நிலை தொட்டி பராமரிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைக்கும்
பணியும்,
சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் வார்டு எண் 4-ல் ரூ.2.00
இலட்சம் மதிப்பீட்டில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க்
அமைக்கும் பணியும், வார்டு எண் 5 அரிசன காலனியில் ரூ.11.00 இலட்சம்
மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து 30,000 லிட்டர் கொள்ளளவு
கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும்
பணியும், ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில்
இடுகாட்டிற்கு சிறு பாலம் அமைத்தல் பணியும், கருப்பண்ணன் கோவில்
அருகில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் போர் அமைத்து 5 எச்.பி மோட்டார்
பொருத்தி 2000 லிட்டர் பிவிசி டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும்
பணியும்,
அருணகிரிநாதர் வீதி 1-ல் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில்வடிகால் பழுது
பார்த்து வடிகால் கட்டும் பணியும், சேரன் வீதி வார்டு எண் 11ல் ரூ.2.50 இலட்சம்
மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் பைப்லைன் அமைக்கும் பணியும், கொட்டங்காடு
11 பகுதியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள ஆழ்துளை
கிணற்றுக்கு 5 எச்.பி மோட்டார் வசதியுடன் 2,000 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க்
அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணியும், கொத்தங்காடு 7-வார்டு எண்
14-ல் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் விநாயகர் கோவில் கிழக்கு புறம் மேல்புறம்
ஆகிய இடங்களில் வடிகால் அமைக்கும் பணியும், பார்க் ரோடு வார்டு எண் 9-
ல் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் சந்தைப்பேட்டை முதல் மயில்வாகனம் வரை
பைப்லைன் சரிசெய்தல் பணியும், பண்டிதர் தெருவில் வார்டு எண் 3-ல் ரூ.5.00
இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தருதல் பணியும், கென்னடி
வீதி மற்றும் திரு.வி.க வார்டு எண் 13-ல் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் கால்வாய்
அமைத்தல் பணியும் என மொத்தம் ரூ.66.00 இலட்சம் மதிப்பீட்டிலான 13 புதிய
திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைவாக
முடித்து பொதுமக்கள் பயனபாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னிமலை பேரூராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு
நேரத்தை குறிக்கும் வகையில் காலை 5.00 மணி, காலை 8.00 மணி, மதியம்
1.00 மணி, மாலை 6.00 மணி ஆகிய நான்கு முறை ஒலிக்கும் மின்சங்கின் பழுது
சரிசெய்யப்பட்டு, அதன் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது என
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.செல்வம்,
சென்னிமலை பேரூராட்சி தலைவர் அசோக் ஸ்ரீதேவி, துணைத்
தலைவர் செளந்தரராஜன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
காயத்திரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர்
ஆயிஷா, இளநிலை பொறியாளர் தியாகராஜன், பெருந்துறை
வட்டாட்சியர் கார்த்திக், உட்பட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
😊
ReplyDelete