Type Here to Get Search Results !

ஜோதிடர்களை அவதூராக பேசிய பிரபல நடிகர் மாரிமுத்து - பள்ளிபாளையத்தில் அனைத்து ஜோதிடர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம்...

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடம் மற்றும் ஜாதகத்தை பற்றி பிரபல நடிகர் மாரிமுத்து அவதூராக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தமிழக முழுவதும் ஜோதிடர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் கல்வி மையம் சார்பில் நடிகர் மாரிமுத்துவை கண்டித்து ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தில் உள்ளிருப்பு போராட்டம்  நடைபெற்றது. 
இந்த போராட்டத்திற்கு மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் ஜோதிடர் முகுந்தன் முரளி தலைமை வகித்தார்.  நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் திருச்செங்கோடு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்,  ஈசன் ஜோதிட அறக்கட்டளை,  பிரபஞ்ச ஜோதிட அறக்கட்டளை,  கரூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை சார்ந்த ஜோதிடர்கள் மற்றும் ராஜசங்கர் பண்டித் பாலசுப்பிரமணியம்,  சுப்பிரமணியம், வல்லரசு, தினேஷ், ராஜா, ராகு வாழ்க ரமேஷ் குமார் மற்றும் கமல சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக செய்தியாளர்களிடம் பேசிய மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் நிறுவனர் முகுந்தன் முரளி,  வரும் காலங்களில் ஜோதிடம் மற்றும் ஜோதிடர்கள் ஆகியவர்களை பற்றி தவறாக பேசுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து தற்பொழுது அவதூறாக பேசிய மாரிமுத்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.