தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 14.12.2025 நேற்று, தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
அதை முன்னிட்டு, பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள கரூர் பைபாஸ் சாலையில் உள்ள அவரது குடும்ப சமாதி மற்றும் திருமகன் ஈவெரா சாலையில் உள்ள குடியரசு இல்லத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மனைவி வரலட்சுமி இளங்கோவன், புதல்வர் சஞ்சய் சம்பத், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா.வின் புதல்வி சமனா, சஞ்சய் சம்பத்தின் மகன் கருண் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார் பலர் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் மாநகர் மாவட்ட தலைவர் டி.திருச்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு, மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், திமுக மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், அறங்காவல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேமுதிக மாவட்ட செயலாளர் ஆனந்த், மதிமுக முருகன், ஐயூஎம் எல் நூர் சேட், எஸ்டிபிஐ லுக்மான், விடுதலை சிறுத்தைகள் பைசல், செங்குந்த முதலியார் சங்க தலைவர் சோழா ஆசைதம்பி, நாயுடு சங்க தலைவர் செல்வராஜ் உட்பட ஈரோடு மாநகரில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்மானத் தலைவரின் நினைவலைகளை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பகிர்ந்தனர், நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எம். பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஈ.பி. ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன், தமிழ்நாடு சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் (வழக்கறிஞர்) ஓ.எம்.ஆர். பழனிவேலு, மாநில பொதுக்குழு உறுப்பினர்களான எ. மாரியப்பன், எம். ஞானதீபம், வி.எம்.கே. செந்தில் ராஜா, மண்டலத் தலைவர்களான மாமரத்து பாளையம் எஸ். கோபி, சூரம்பட்டி சாம்ராட் அசோக், ஆர். விஜய் பாஸ்கர், எச்.எம். ஜாபர் சாதிக், துணைத் தலைவர்களான பா. ராஜேஷ் ராஜப்பா, பி.எஸ். ஈஸ்வரமூர்த்தி, கே.எஸ். செல்வம், சி. பாஸ்கர்ராஜ், பாபு என்கிற வெங்கடாஜலம், பொதுச் செயலாளர்களான வி.கே. சச்சிதானந்தம், இரா. கனகராஜன், எ. வின்சென்ட், கராத்தே யூசுப், ஏ.சி. சாகுல் அமீத், எ. அன்பழகன், கராத்தே யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில முதன்மை துணைத் தலைவர் எம். ஜவஹர் அலி, தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் (டி.சி.டி.யு) மாநிலத் துணைத் தலைவர் குளம் எம். ராஜேந்திரன், தமிழ்நாடு வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் சி.எம். ராஜேந்திரன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆரிப் அலி, விவசாய பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன், ஈரோடு கௌதமன், ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே. விஜய்கண்ணா, ஈவிகே சம்பத் பேரவை டி.என்.சீனிவாசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்களான கை சுப்பிரமணியம், கொற்றவேல், பங்கஜம் சுப்பிரமணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், மாவட்ட சேவாதள தலைவர் எஸ். முகமது யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் இப்ராகிம், துணைத் தலைவர் கே.என். பாஷா, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் யாசர் அரஃபாத், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தோடு எஸ். பிரபு, சென்னிமலை முன்னாள் வட்டாரத் தலைவர் ஓ.சி.சண்முகம், முன்னாள் வட்டாரத் தலைவர் எம். செல்வராஜ், ஈரோடு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மோகன்ராஜ், நசியனூர் கவுன்சிலர் எம்.ஆர். நடராஜ், மற்ற முக்கியப் பிரமுகர்கள் என்.பி. சுப்பிரமணியம்,
முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு, நெசவாளர் அணி மாவட்டத் தலைவர் சி. மாரிமுத்து, என்.சி.டபிள்யூ.சி மாவட்டத் தலைவி ஆர். கிருஷ்ணவேணி சேவா தளம் மாநிலச் செயலாளர் எம். பேபி, பள்ளிபாளையம் வட்டாரத் தலைவர் அல்லிமுத்து, INTUC நிர்வாகி வேடியப்பன், மாவட்ட நிர்வாகிகளான பெரியார்நகர் சூரஜ், கே.ஜே. டிட்டோ, புலி சிவா, ஜெ.சதீஸ், நூருத்தீன், ஈ.எம்.சி. ராஜூத்தீன், திண்டல் ஏ.டி. ஜெகநாதன், கேமரா செல்வம், ராஜாஜிபுரம் சிவா, பி. குமரேசன், வாட்டர் சிவாஜி, வேன் ராமசாமி, டீக்கடை லோகு, சூரம்பட்டி வார்டு தலைவர் விஜயகுமார், கருக்குவேல், விஜயராகவன் சக்திவேல், பெரியார்நகர் செந்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, பத்ரி, அருள், ஈரோடு மேற்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிட்டி கல்கி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தினகரன், நவீன், சித்தோடு லோகு & மணி, நரிபள்ளம் ரவிசந்திரன் ஆகியோர் மற்றும் ஈரோடு, நாமக்கல் உட்பட அனைத்து மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர்
உள்ளிட்ட அனைத்து பிரிவு காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)